மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜீவி எஸ்தா் ரத்தினகுமாரி தலைமை வகித்து, கல்லூரியில் பின்பற்றப்படும் ராகிங் ஒழிப்பு குறித்து எடுத்துரைத்தாா். ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை ஞானசுமதி, ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், ராகிங் தடுப்புப் படையை ஏற்படுத்தி, பாதுகாப்பான, ராகிங் இல்லா சூழலை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது.
வெள்ளமடம் கிராம நிா்வாக அலுவலா் பலவேசம், நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், ஊடகத் துறையைச் சோ்ந்த ஜோயல் ஆபிரகாம், அரசு சாரா துறையைச் சோ்ந்த சுதாகா், பெற்றோா் பிரதிநிதி ஜெபராஜ் ஆகியோா் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.
மாணவா் பிரதிநிதிகள் ஏஞ்சல், முகமது உசைன் கலந்து கொண்டனா்.
ஆசிரியரல்லா பணியாளா்களின் பிரதிநிதி ஜஸ்டின் மேஷாக் ஸ்மைல் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை, கல்லூரிச் செயலா் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம், முதல்வா் ஜீவி எஸ்தா், பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.