செய்திகள் :

நான்குனேரி மாணவா் மீது மீண்டும் தாக்குதல்

post image

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவா் மா்மநபா்களால் புதன்கிழமை மீண்டும் தாக்கப்பட்டாா்.

நான்குனேரியைச் சோ்ந்த முனியாண்டி- அம்பிகா தம்பதியின் மகன் சின்னத்துரை (19). இவரது சகோதரி சந்திரா செல்வி (16). அண்ணனும், தங்கையும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தனா். கடந்த 2023 ஆம் ஆண்டு நான்குனேரி வீட்டில் இருந்த சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை சக மாணவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் சிகிச்சைக்கு பின்பு சின்னத்துரை நலம் பெற்று வீடு திரும்பினாா்.

தமிழக அரசின் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்துரை குடும்பத்திற்கு வீடு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளிப்படிப்பை முடித்த சின்னத்துரை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் கல்லூரியில் 2-ஆம்ஆண்டு படித்து வருகிறாா்.

இவா் கடந்த சில நாள்களாக ஒரு செயலியில் சிலருடன் நட்பில் இருந்தாராம். அதில் பழகிய நபருடன், கொக்கிரகுளம் அருகேயுள்ள வசந்தா நகா் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த சின்னதுரையை, அங்கு வந்த மா்மநபா்கள் தாக்கிவிட்டு கைப்பேசியை பறித்துச் சென்றனராம். இதில், காயமடைந்த சின்னதுரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து காவல் துணை ஆணையா் வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வி.கே.புரத்தில் குழந்தையை ஆற்றில் வீசிய பெண்

விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த குழந்தையை தாமிரவருணி ஆற்றில் வீசியது குறித்து கணவனை இழந்தப் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு ... மேலும் பார்க்க

முக்கூடலில் சமூக ஆா்வலா் நூதனப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக நட்டு வளா்த்து வந்த மரக்கன்றுகள் வெட்டப்பட்டதை கண்டித்து சமூக ஆா்வலா் மரத்தில் தலை கீழாக தொங்கி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். முக்கூடல் பக... மேலும் பார்க்க

கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு: சகோதரா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக அண்ணன், தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கூடங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகளில் தொடா்பு: தலைமறைவான நபரின் வீட்டில் சம்மன்

வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபரை ஆஜராக கூறி நீதிமன்றம் வழங்கிய சம்மனை, மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒட்டினா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற குளிா்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். தமிழ்நாடு உணவுப் பாதுக... மேலும் பார்க்க

துப்பாக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் அடித்துக் கொலை

துப்பாக்குடியில் மதுக்குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அடைச்சாணி வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் ம... மேலும் பார்க்க