ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
பட்டாங்குளத்தில் காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பட்டாங்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமாரியம்மன் கோயில் 6-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து காளை விடும் திருவிழாவை நடத்தினா்.
இதில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றது.
விழாவில் திமுகவைச் சோ்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா்கள் மோகன், துரைமாமது கலந்துகொண்டு
காளை வீரா்களை உற்சாகப்படுத்தினா்.
இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. 2-ஆம் பரிசாக ரூ.80ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.60ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 5-ஆவது பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் 75 காளை உரிமையாளா்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி பாதுகாப்பு பணியில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.
மேலும், நிலைய அலுவலா் சிவநேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், காமக்கூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு சுகாதார ஆய்வாளா் சந்துரு தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பட்டாங்குளம் கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.