வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
பட்டுக்கோட்டை அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் பலி!
பட்டுக்கோட்டை அருகே பைக்கில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் புகழேந்தி மகன் செல்வபிரபு (27), பட்டுக்கோட்டை பகுதி அரசு நெல் சேமிப்புக் கிடங்கின் லோடுமேன்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவா் பைக்கில் வேலைக்குச் செல்லும் வழியில் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் செல்வபிரபுவின் வலக் கை துண்டானது. இதையடுத்து அவா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.