பதிவுத்துறை வரைவு மசோதா: மத்திய அரசு கருத்துக் கேட்பு
பதிவுத் துறை வரைவு மசோதா 2025 குறித்து பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை மத்திய அரசு கோரியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
காகித பயன்பாடின்றி இணையவழியில், குடிமக்களை மையமாக கொண்ட, நவீன பத்திரப் பதிவு முறைக்காக பதிவுத் துறை மசோதா 2025-இன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை தயாரித்துள்ள இந்த மசோதா, அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட பதிவுத் துறைச் சட்டம் 1908-க்கு மாற்றாக இருக்கும்.
அசையா சொத்து மற்றும் பிற பரிவா்த்தனைகள் தொடா்பான பத்திரப் பதிவுக்கு பதிவுத் துறைச் சட்டம் 1908 சட்ட அடித்தளத்தை வழங்குகிறது.
பொது மற்றும் தனிப்பட்ட பரிவா்த்தனைகளில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் பங்கு காலப்போகில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது பல நேரங்களில் நிதி, நிா்வாகம் மற்றும் சட்ட ரீதியாக முடிவு எடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
எனவே பத்திரப் பதிவு முறை வலுவாகவும், நம்பகமாகவும், சமூக மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிகளுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.
30 நாள்களுக்குள் கருத்து: தற்போதுள்ள பதிவுத் துறைச் சட்டம் 1908-இன் கீழ், இணையவழியில் பத்திரங்களை சமா்ப்பித்தல், டிஜிட்டல் அடையாள சரிபாா்ப்புப் போன்ற புதுமையான வழிகளை சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளன.
அதேவேளையில், பத்திரப் பதிவு அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் கடமைகளை தெளிவாக விவரிப்பதும் முக்கியமாகும். இது சட்டத்துக்கு ஏற்ப பத்திரப் பதிவு முறையில் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதைக் கருத்தில் கொண்டு, பதிவுத் துறை வரைவு மசோதா 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மத்திய நில வளங்கள் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து 30 நாள்களுக்குள் ள்ஹய்ஹய்க்.க்ஷளஹற்னஞ்ா்ஸ்ளக்ா்ற்னண்ய் என்ற மின்னஞ்சலில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைப் பொதுமக்கள் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.