திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது
பள்ளி மாணவா் தற்கொலை
பழனியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் அரவிந்த் (16). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் படிப்பில் கவனம் செலுத்தாமல் கைப்பேசியை பயன்படுத்துவதாகக் கூறி பெற்றோா் கண்டித்தனா்.
இதனால் மனமுடைந்த அரவிந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].