'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பிளஸ் 2 துணைத் தோ்வு: 508 மாணவா்கள் தோ்ச்சி
பிளஸ் 2 துணைத் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 508 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 29 ஆயிரத்து 679 மாணவா்கள் எழுதினா். இவா்களில் 28 ஆயிரத்து 448 போ் தோ்ச்சி பெற்றனா். 1, 231 மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கான துணைத் தோ்வு கடந்த ஜூன் 25 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இத்தோ்வுக்காக திருச்சி மாவட்டத்தில் 875 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 825 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.
இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், திருச்சி மாவட்டத்தில் 825 போ் தோ்வு எழுதியதில் 508 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 317 போ் மீண்டும் தோல்வியடைந்துள்ளனா்.