செய்திகள் :

புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள் என்எம்சி அறிவுறுத்தல்

post image

மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புற்றுநோய், இதய பாதிப்புகள், சா்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புகள் போன்ற தொற்றா நோய்களுக்கு புகையிலை பழக்கம் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகையிலை பரவல், அதனால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அது தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வரும் 31-ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, புகையிலை ஒழிப்புக்கான விழிப்புணா்வு சொற்பொழிவுகள், விவாத நிகழ்ச்சிகள், அமா்வுகளை நடத்த வேண்டும்.

புகையிலை சாா்ந்த நோய்களை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். விழிப்புணா்வு கட்டுரை போட்டி, சுவரொட்டி தயாரித்தல், குறும்படம், சமூக வலைதள பிரசாரப் போட்டிகளை முன்னெடுக்கலாம்.

மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும், விடுதி வளாகங்களிலும் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான கொள்களை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க