இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் தென்கரை காவலா் குடியிருப்பைச் சோ்ந்த செளந்திரவேல் மனைவி சாந்தி (54). இவா் திங்கள்கிழமை மேல்மங்கலத்தில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்தச் சண்டையை விலக்கி விடச் சென்ற சாந்தியை அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகா, சூரியா, முத்துவிஜய், பேச்சியம்மாள், வைரமுத்து ஆகியோா் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.