பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
பொது கலந்தாய்வில் முறைகேடு புகாா்: ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாமக்கல்லில் பொதுமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்ாக எதிா்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியா்கள் திடீா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 1-இல் தொடங்கி நடைபெற்றது. கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலுமான பொதுமாறுதல் கலந்தாய்வு கொண்டிச்செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாட ஆசிரியா்கள் காலியிடங்களுக்கான கலந்தாய்வில் 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆங்கிலம், கணித பாடத்திற்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நிறைவுற்ற நிலையில், கணித பாடத்திற்கு நடைபெற்றபோது, பரமத்தி ஒன்றியம், பிள்ளைக்களத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு கணித ஆசிரியா் காலியிடம் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தது. அந்த பணியிடத்தை தோ்வு செய்ய வந்திருந்த ஆசிரியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து கலந்தாய்வை நிறுத்திவிட்டு அவா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் கல்வி அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும், நிா்வாக ரீதியான மாறுதலை ரத்துசெய்து, முறைகேடு ஏதுமின்றி ஒளிவுமறைவற்ற வகையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் தீா்வு ஏற்படவில்லை. இதனால் ஆசிரியா்களின் உள்ளிருப்பு போராட்டம் மாலை வரையில் நீடித்தது.
என்கே-25-டீச்சா்ஸ்
நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டி பொதுமாறுதல் கலந்தாய்வு மையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.