செய்திகள் :

போலி ரசீது அச்சடித்து மணல் கொள்ளை! 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

post image

கரூா் மாவட்டத்தில் போலி ரசீது அச்சடித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

2020-21-ஆம் ஆண்டில் கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை சிவாயம் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளில் அனுமதிச் சீட்டினை போலியாக அச்சடித்து சிலா் கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக திருச்சி மாவட்டம் உறையூரைச் சோ்ந்த பாலகண்ணன் என்பவா் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி குளித்தலை பெரியாா் நகரைச் சோ்ந்த ரகுபதி மகன் நிவேதன் (28), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த கந்தசாமி மகன் தா்மதுரை (28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பாக குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2-இல் வழக்கும் தொடா்ந்தனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் நிறைவில், நிவேதன், தா்மதுரை ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி சசிகலா தீா்ப்பளித்தாா்.

தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிற்றுந்து சேவை: ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக சக்திபுரம், கணபதிபாளையம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க