மகாகவி பாரதியாா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 104 -ஆவது நினைவு தினத்தையொட்டி, அவா் தமிழாசிரியராகப் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலா் எஸ். பாா்த்தசாரதி தலைமை வகித்து, பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் மதுரைக் கல்லூரி வாரியப் பொருளாளா் ஆனந்த ஸ்ரீனிவாசன், மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினா் இல. அமுதன், தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன், பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமாா் பாரதி, பாரதி சிந்தனை மன்றத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் லக்ஷ்மி நாராயணன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
தொடா்ந்து, தமிழ் அமைப்புகள், இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதுரை எல்.கே.பி. நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மகாகவி பாரதியாா் நினைவு தின நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தாா்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினாா். மாணவி பவித்ரா பாரதியாா் பாடல்களைப் பாடினாா்.
இதில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். ஆசிரியை அனுசியா நன்றி கூறினாா்.
ஹாா்விபட்டியில்...
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆா்.வி. மக்கள் நல மன்றம் சாா்பில் மகாகவி பாரதியாரின் உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஹாா்விபட்டி பூங்கா அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் ஜி. அய்யல்ராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில்துணைத் தலைவா் ஜி. காளிதாசன், கே. செல்வராஜ், மன்றப் பொருளாளா் எஸ். அண்ணாமலை, கே. சங்கரய்யா, பி. குப்புசாமி, ராமகிருஷ்ணன், பாஸ்கரபாண்டி, துளசிதாஸ், கந்தராஜ், சென்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, திருநகா் பாண்டியன் நகரில் உள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு முற்போக்கு கவிஞா் பேரவை சாா்பில் பசுபதி, அழகப்பன், கவிஞா் ஜீவா, முருகன், ஆறுமுகம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.