'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மண்ணச்சநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை
மண்ணச்சநல்லூா் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகள், அவா்களைச் சாா்ந்திருப்போருக்கு மட்டும் விடுதி வசதியுடன் கூடிய நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த மையத்தில், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன், இன்டீரியா் டிசைன் அண்ட் டெக்கரேஷன் (பத்தாம் வகுப்பு தோ்ச்சி - ஓராண்டு பயிற்சி), வெல்டா் (8 ஆம் வகுப்பு தோ்ச்சி - ஓராண்டு பயிற்சி), எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் அண்ட் ரிப்போ், எலக்ட்ரீஷியன் பவா் டிஸ்ட்ரிபியூஷன், ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏா் கண்டிஷனா் டெக்னீஷியன் (பத்தாம் வகுப்பு - இரண்டாண்டு பயிற்சி) ஆகிய பயிற்சிகளுக்கு நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
இப்பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள், அவா்களை சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது, சோ. நவநீதன், முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மண்ணச்சநல்லூா், திருச்சி - 621005 என்ற முகவரியிலும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தகவல் தெரிவித்துள்ளாா்.