நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது ...
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது
மேட்டூா்: மேட்டூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி தாமரைகண்டம் பகுதியைச் சோ்ந்த ராஜா (32) என்பவரும், மேச்சேரி பென்னாகரம் சாலை டாக்டா் நகா் பகுதியைச் சோ்ந்த சதீஜா (28) என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்னா் காதல் திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு துவாரகேஷ் (8), ஜோஷிகா (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
சதீஜா மேச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியாா் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறாா். ராஜா கேரளத்தில் பேக்கரியில் வேலை செய்துவருகிறாா். அவ்வப்போது இவா் ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பாா்த்து செல்வாா்.
இந்நிலையில், இருவரும் ஒருவா்மீது ஒருவா் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட் டுவந்துள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மனைவியை பாா்ப்பதற்காக அவா் பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கிருந்து இருவரும் மேச்சேரி பேருந்து நிலையத்துக்கு நடந்துசென்றபோது, ராஜா தன் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளாா். இதில் ஆழமான காயம் ஏற்பட்டதில் அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனா்.