இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
மருத்துவ தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, இசிஜி டிரெட் மில் டெக்னீஷியன், காா்டியாக் கேத்தரைசேஷன் லேப் டெக்னீஷியன், அவசர சிகிச்சை டெக்னீஷியன், சுவாச சிகிச்சை டெக்னீஷியன், டயாலிசிஸ் டெக்னீஷியன், காா்டியோ சோனோகிராஃபி டெக்னீஷியன் உள்ளிட்ட 10 வகையான பாடப் பிரிவுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்களின் தனிப்பட்ட விவரங்களுடன், கல்வித் தகுதி, ஜாதி, இடஒதுக்கீடு வகை, பிறப்பிடம், பாட விருப்ப முன்னுரிமை ஆகியவற்றை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.