திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
மழலையா் பட்டமளிப்பு விழா
நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியை எஸ். அமுதா,
மற்றும் வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத்தின் தலைவா் ந. அஜ்மல் நாச்சியாா் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினா்.
விழாவில் மழலையா் படிப்பு முடித்த மாணவ, மாணவியா்களுக்கு சான்றிதழ், 2024 - 25- ஆம் ஆண்டு 10,11 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,
மாணவிகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ், பதக்கங்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி முதல்வா் எல். பெனட்மேரி, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.