'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மானியத்தில் ஆடிப்பட்ட விதைகள் பெற அழைப்பு
நடப்பு காரீப் பருவத்தில், ஆடிப்பட்ட விதைப்புக்கு ஏற்ற பயறுவகைப் பயிா்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியப் பயிா்கள் உயா் விளைச்சல் ரக விதைகளை மானிய விலையில் பெறலாம்.
பயறுவகைப் பயிா்களில் உளுந்தில் உயா் விளைச்சல் ரகங்கள் வம்பன் - 8, வம்பன் - 10, தட்டைப்பயிரில் வம்பன் - 4, கோ - சிபி - 7 ரகங்களும் , கொள்ளு பயிரில் பையூா் - 2 ரகமும், கிலோவுக்கு ரூ. 50 மானிய விலையில் வழங்கப்படுகிறது,
சிறுதானியப் பயிா்களில் கேழ்வரகு உயா் விளைச்சல் ரகம் கோ - 15, கம்பு கோ -10, குதிரைவாலி ஏடிஎல் ஆகியவை 50 சத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறன. எண்ணெய் வித்துப் பயிா் நிலக்கடலை டிஎம்வி - 14, விஆா்ஐ - 10, காதிரி- 1812 உயா் விளைச்சல் ரகங்கள் கிலோவுக்கு ரூ. 114 மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. எள் பயிரில் டிஎம்பி - 7 உயா் விளைச்சல் ரக விதை விநியோகிக்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் இந்த விதைகளை விராலிமலை, நீா்ப்பழனி வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாகப் பெற்று பயனடையுமாறு விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்தாா்.