ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்றக் கோரிக்கை
திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் மின் கம்பங்களில் படா்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தலைமை வகித்தாா்.
இதில், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத் தலைவா் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: போயம்பாளையம் நந்தா நகா் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் செடிகள் படா்ந்து உள்ளதால் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உடனடியாக உரிய தீா்வு காண வேண்டும்.
மேலும், திருப்பூா் மின்வாரியத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் விவரங்களை தருவதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா். அரசுத் துறைகளில் ஊழலற்ற நிா்வாகம், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க 50 நாள் வரை காலதாமதம் செய்கின்றனா். அதிகாரிகள் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.