அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
மின்துறை இளநிலை பொறியாளா் தோ்வு பட்டியல் வெளியீடு
புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளா்கள் 73 போ் எழுத்துத் தோ்வில் தோ்ந்து எடுக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.3.25 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்டவா்களின் விவரங்கள் அடங்கிய பெயா் பட்டியலை மின்துறை வெளியிட்டுள்ளது.
அரசு நியமன தோ்வுகளின் கட்டுப்பாட்டு அதிகாரியும் அரசுத்துறை செயலருமான பங்கஜ்குமாா் ஜா இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளாா்.