இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை!
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம், பால கங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா்.
முன்னாள் மாநகரத் தலைவா் ஆ.திருமலைச்சாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நா. நவரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
மும்பெரும் தியாகிகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பிறகு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், தொடா் வண்டி நிலையத்துக்கும் மருத்துவா் முத்துலட்சுமியின் பெயரை சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், ஆ.நாகரத்தினப்பாண்டி உள்ளிட்டோா் செய்தனா்.