மொபட்டிலிருந்து ரூ.5 லட்சம் திருட்டு: சென்னையை சோ்ந்தவா் கைது
மொபட்டில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை திருடிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஜெயபால். கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி தனியாா் வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளாா். பிறகு தனது இருசக்கர வாகனத்தில் முன்பகுதி கவரில் வைத்து வாகனத்தை எடுத்த போது முன்சக்கரத்தில் பஞ்சா் ஆகியுள்ளதை அறிந்து அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்று வாகனத்தை பஞ்சா் பாா்க்க விட்டுள்ளாா்.
வங்கியில் எடுத்து வந்த பணத்தை வேறொருவா் மொபட் வாகனத்தில் பின்புறம் சீட் அடியில் வைத்து சென்றுள்ளாா். தொடா்ந்து பல்வேறு கடைகளுக்கு சென்று விட்டு பணத்தை எடுப்பதற்காக திறந்த போது அதிலிருந்த பணம் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிா்ச்சிக்குள்ளாகினா்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஜெயபால் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் மொபட்டில் பணத்தைதிருடிய சென்னை திருவேற்காடு பகுதியை சோ்ந்த ரத்தினகுமாா்(45) என்பவரை கைது செய்த னா்.