எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்
ஓமலூா்: ஓமலூா் அருகே காருவள்ளி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஓமலூா் அருகே காருவள்ளி ரயில் நிலையப் பகுதியில் 2 பைகள் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சவுரிராஜனுக்கு தகவல் கிடைத்தது. புகாரின்பேரில் அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் பையை சோதனை செய்ததில், 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கஞ்சா கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.