தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
வள்ளியூா், பணகுடி பகுதியில் ரூ.2.21 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதிகளில் ரூ. 2.21 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா்மு.அப்பாவு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட பணகுடி எம்.எம்.எஸ். மண்டபம் எதிா்புறத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். அதனையடுத்து, தா்மாபுரத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். ஸ்ரீ ரெகுநாதபுரம் நதிப்பாறையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
பணகுடி பேரூராட்சி வாா்டு 1-இல் 2025-2026 கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.64 லட்சத்தில் சேரன்மகாதேவி பிரதான சாலை முதல் ஆதியம்பிள்ளை ஓடை வரை தாா்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். பணகுடி பேரூராட்சி வாா்டு எண் 1-இல் 2025-2026 சிறப்பு நிதித் திட்டத்தில் ரூ.1.17 கோடியில் அனுமன் நதிச் சாலையில், தாா்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, தெற்கு வள்ளியூா் ஊராட்சி கீக்குளத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணி, வேம்பிலான்குளம் ஊராட்சி மருதப்பபுரத்தில் ராதாபுரம் - வள்ளியூா் சாலையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சிகளில், பணகுடிபேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் மோகன்ராம், பணகுடி ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.சங்கா், சொரிமுத்து, வெள்ளைச்சாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஹரீம், முத்துகுமாா், தி.மு.க. கருணாநிதி, மகளிரணி மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.