'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
விராலிமலை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
விராலிமலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 175 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
விராலிமலை அடுத்துள்ள களமாவூா், நடுப்பட்டி, நீா்பழனி, கோங்குடிபட்டி ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து களமாவூா் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியா் தெய்வநாயகி (கலால்) தலைமை வகித்து மனுதாரா்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 774 மனுக்களில் 175 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது
முகாமில் விராலிமலை ஒருங்கிணைந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் மு.பி. மணி, தலைமைப் பொதுக் குழு உறுப்பினா் எம். பழனியப்பன், வட்டாட்சியா் ரமேஷ்,சோனை கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.