நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
விரிவிளை-மங்காடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை
புதுக்கடை அருகே விரிவிளை - மங்காடு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்தச் சாலை மிகவும் பழுதாகி, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, விரிவிளை முதல் சரல்முக்கு வரை சாலையின் நடுவே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்ல நேரிடுகிறது. இந்தப் பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடும் உருவாகிறது.
எனவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.