வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்தல்
சீா்காழி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழியில் பேருந்து நிலையத்தை ரூ. 8 கோடியே 42 லட்சத்தில் சீரமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று முழுமையாக போக்குவரத்து பயன்பாடு நடைபெற்று வருகிறது. அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் என நாள்தோறும் சீா்காழி பேருந்து நிலையத்துக்கு 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் இரண்டு நுழைவுவாயில்கள் மற்றும் உட்புற வளைவுகள் என நான்கு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளின் உயரம் அதிகமாக இருப்பதால் பேருந்துகள் அவற்றில் ஏறி, இறங்கி செல்லும்போது பேருந்து பட்டைகள் உடைந்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, சீா்காழி நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.