ஸ்பிரீட் படக் கதையை கசியவிட்ட நடிகை..! இயக்குநர் சந்தீப் பதிவினால் சர்ச்சை!
பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரீட் படத்தின் கதையை கசியவிட்ட நடிகை குறித்து இயக்குநர் சந்தீப் வங்கா பதிவிட்டது வைரலாகி வருகிறது.
இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக அனிமல் படத்தில் நடித்து புகழ்பெற்ற திருப்தி டிம்ரி நாயகியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து வெளியேறிய மூத்த நடிகை இந்தப் படத்தின் கதையை கசியவிட்டதாக இயக்குநர் சந்தீப் வங்கா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியது வைரலாகியுள்ளது.
அந்தப் பதிவில் சந்தீப் வங்கா கூறியதாவது:
ஒரு கதையை நடிகர்களிடம் சொல்லும்போது அவர்கள்மீது 100 சதவிகிதம் நம்பிக்கை வைத்துதான் சொல்கிறேன். எங்களுக்குக்குள் வெளிப்படுத்தாத ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால், நீங்கள் இப்படி செய்ததன்மூலம் ஒன்றை வெளிப்படையாகப் பலரும் அறியும்படி செய்துள்ளீர்கள்.
சிறிய நடிகையை ஏளனம் செய்வதா? எனது கதையை வெளியே சொல்வதா? இதுதான் உங்களது பெண்ணியவாதமா?
இயக்குநராக ஒரு படத்திற்காக பல ஆண்டுகள் உழைக்கிறேன். எனக்கு படத்தை இயக்குவதுதான் எல்லாமே. இது உங்களுக்கு புரியவில்லை எனில் எப்போதுமே புரியாது.
கதையை சொல்வதாக இருந்தால் அடுத்தமுறை முழுவதுமாகச் சொல்லுங்கள். எனக்கு கவலையில்லை. மோசமான பிஆர் விளையாட்டுகள். எனக்கு ஹிந்தியில் இந்தப் பழமொழி பிடிக்கும் - ’விரக்தியடைந்த பூனை தூணைக் கீறுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நடிகை யாராக இருக்குமென பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் அது தீபிகா படுகோன் என கமெண்டில் பலரும் கூறி வருகிறார்கள்.
When I narrate a story to an actor, I place 100% faith. There is an unsaid NDA(Non Disclosure Agreement) between us. But by doing this, You've 'DISCLOSED' the person that you are....
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) May 26, 2025
Putting down a Younger actor and ousting my story? Is this what your feminism stands for ? As a…