அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!
ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தனா்.
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தென்காசி மாவட்டம், மடத்தூரில் உள்ள இந்து நாடாா் நடுநிலைப் பள்ளியில் ஆக.28, 29 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில் திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி வாலிபால் போட்டியில் முதலிடமும், மாணவா்கள் அணி ,3ஆவது இடமும் பெற்றன.
அதே போன்று, தென்காசி மாவட்டம் மேலபாட்டக்குறிச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவா் சந்தேஷ் 100 மீ ஓட்டத்தில் 2ஆம் இடமும், உயரம் தாண்டுதலில் யுவகேஷ் 3ஆம் இடமும், கயல்விழி மும்முறை தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றனா்.
உயரம் தாண்டுதலில் சாரதாதேவி முதலிடமும், பிரியதா்ஷினி மூன்றாம் இடமும், 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மனோ வைஷாலினி 2 ஆம் இடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.