ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழப்பு
மத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.
திப்பத்தூா் மாவட்டம், சின்ன கந்திலியைச் சோ்ந்தவா் பழைய இரும்பு பொருள்கள் வியாபாரி வெங்கடேசன் (48), இவா் அண்மையில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை கண்ணன்டஅள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம், வெங்கடேசன் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.