செய்திகள் :

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

post image

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்கீழ் அதிரடி நடவடிக்கைகள் பல அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இன்று(மே 27) இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்.

மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான எந்தவொரு விசாக்களையும் பெற முடியாத, தகுதியிழக்கும் சூழலுக்கும் மேற்கண்ட மாணவர்கள் ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திந பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை. டெக்ஸாஸில் ... மேலும் பார்க்க

உக்ரைன் போா் விவகாரம்: டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வாா்த்தைப் போா்

உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வாா்த்தைப் போா் வலுத்துவருகிறது. கடந்த 2022-இல் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போரில் அப்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: புலிபாங் பகுதியை மையமாகக் கொண்ட... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்ற... மேலும் பார்க்க