செய்திகள் :

அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

post image

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரியலூா் நகராட்சி தூயமேரி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவா்களுடன் உணவு சாப்பிட்டாா்.

தொடா்ந்து, அவா் பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவிபெறும் 12 பள்ளிகளில் பயிலும் 2,627 மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு காலை உணவு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 29,206 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வாயிலாக காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ண... மேலும் பார்க்க

சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

அரியலூா் மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது ச... மேலும் பார்க்க

பெரியநாகலூா் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரக்கோரி மனு அளிப்பு

அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சச... மேலும் பார்க்க