சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்
அரியலூா் மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வாகன உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வதிக்கப்படும்.
வாகனத்தை இயக்கிய சிறுவா்களுக்கு அவா்களது 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநா் உரிமம் பெற தடை வதிக்கப்படும். இயக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கோ, பெற்றோருக்கோ சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
எனவே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவா்கள், இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை தவிா்க்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.