ஓமலூா் காவல் துறையை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் காவல் ஆணையரிடம் புகாா்
ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா் குழுவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், தணிக்கை அறிக்கை, மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.