செய்திகள் :

ஆக. 9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

சேலம் மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவிருக்கும் இந்த முகாமில், 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்துவித கல்வித் தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0427-240750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க