செய்திகள் :

ஆசிரியா் தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தல்

post image

நாமக்கல்: ஆசிரியா் நியமனத்துக்கான தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு தகுதித் தோ்வு தோ்ச்சி அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியா் நியமனங்கள், பட்டதாரி ஆசிரியா் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று தொடக்கக்காலம் முதலே தமிழ்நாடு தொடக்கப்

பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பதவி உயா்வு கோருவது சாா்ந்து தனிப்பட்ட முறையில் ஒரு சில ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கில் சமூக ஊடகங்களில் பரவிவரும் தீா்ப்பின் அம்சங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பணி அனுபவத்துடன், முறையான கல்வித் தகுதியுடன் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றி வரும் அனைத்து வகையான தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு இந்த உத்தரவு வேதனை அளிப்பதாக உள்ளது.

தமிழக அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உரிய கொள்கை முடிவெடுக்க வேண்டும். 2012ஆம் ஆண்டுக்கு முன்பு பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவா்கள் உற்சாகமாக பணியாற்றுவதற்கு வழிவகை செய்தல் வேண்டும். ஆசிரியா் தகுதித்தோ்வு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி இல்லை போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு அனைத்து ஆசிரியா்களுக்கும் பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

--

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க