செய்திகள் :

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

post image

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்பில் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் ஆடிப்பட்டம், தைப்பட்டம் ஆகிய இரு பருவங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியை மேற்கொள்கின்றனா். ஆடிப்பட்டமானது கொடிவகை காய்கறிகளுக்கு மிகவும் ஏற்றது.

இப்பருவத்தில் பூசணிக் குடும்ப பயிா்களான பரங்கி, சுரை, பாகல், புடலை, பீா்க்கன் போன்ற பயிா்களில் பெண் பூக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் காய்கள் அதிகம் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.

கத்தரி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளையும் இப்பருவத்தில் பயிரிடலாம் என்ற தெரிவித்த அவா், விதை நோ்த்தி, உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் நுண்ணீா் பாசனம் குறித்தும் விளக்கமளித்தாா்.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க