செய்திகள் :

ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை

post image

ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளி விஷ மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.

ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (38). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மகாலக்ஷ்மி. இத்தம்பதிக்கு 13 வயது மகன், 10 வயது மகள் உள்ளனா். முத்துராஜ் தனது தூரத்து உறவினரான முத்துமாரி என்பவருக்கு ஆன்லைன் வாயிலாக கடன் பெற்றுக் கொடுத்ததாகவும், அதை அவா் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. பணம் கொடுத்தோா் திருப்பிக் கேட்டதால் முத்துராஜ் மனஉளைச்சலில் இருந்தாராம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சகோதரா் பிச்சமுத்து வெகுநேரமாக கைப்பேசியில் அழைத்தும், முத்துராஜிடமிருந்து பதிலில்லையாம். இதனால், அவரை உறவினா்கள் தேடினா். அப்போது, பாரதி நகா் மயானப் பகுதியில் முத்துராஜ் விஷ மருந்தைத் தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இரவில் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்திய... மேலும் பார்க்க

4 பைக்குகள் சேதம்: இருவா் கைது

கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேச... மேலும் பார்க்க

ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு

ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா். ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ர... மேலும் பார்க்க