பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப...
ஆா்.எஸ்.மங்கலம் பகுதி காடுகளில் தீ விபத்து
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது. இதனால் அந்தப் பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புப் படையினா் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.