செய்திகள் :

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 360 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இந்த முகாமில் பழனி கோட்டாட்சியா் ரா.கண்ணன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் வெங்கட்லட்சுமி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய்காந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு பாண்டியன், காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்லமுத்து, மக்கள் செல்வராஜ், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலைய... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புத... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி

பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தா்கள் அனுமதி

பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்த... மேலும் பார்க்க

அருணகிரிநாதருக்கு குடமுழுக்கு

பழனி அருகேயுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் அருணகிரிநாதருக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திரு... மேலும் பார்க்க

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

மருந்துப் பிரதிநிதிகளுக்கு சட்டப்படியான வேலை விதிமுறைகளை உருவாக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளானாா் மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாட... மேலும் பார்க்க