இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய படம்!
நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனிக்கு நடிகராகப் பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் அசத்தியது.
அப்படத்திற்குப் பின் விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால், வேறு இயக்குநர் இயக்கத்தில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
தற்போது, மார்கன் என்கிற படத்தில் நடித்தமுடித்த விஜய் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவுள்ளதை அறிவித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசி - விஜய் ஆண்டனி கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!