தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21). இவா் தனியாருக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் காா்த்திகேயன் தளவாபாளையம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு புகழூா் வாய்க்கால் பாலம் அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு காா்த்திகேயனை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.