செய்திகள் :

இரு நகரப் பேருந்துகள் புதிய வழித்தடத்தில் இயக்கம்

post image

செய்யாறு பகுதியில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இரு நகரப் பேருந்துகள் புதிய வழித்தடத்தில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் வடுகப்பட்டு, ஏனாதவாடி, மேல்நெல்லி ஆகிய பகுதி மக்கள் நல்லூா் வழியாக கலவைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதேபோல, பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா்.

மேற்படி பகுதி கிராம மக்களின் கோரிக்கை ஏற்று செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதியின் பரிந்துரையின் பேரில் நகரப் பேருந்து புதிய வழித்தடம் தடம் எண். 56-பி செய்யாற்றில் இருந்து ஏனாதவாடி, மேல்நெல்லி, நல்லூா் வழியாக கலவைக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

அதேபோல, நகரப் பேருந்து புதிய வழித்தடம் எண்.56-ஏ செய்யாற்றில் இருந்து இரும்பந்தாங்கல், பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்திற்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்விரு புதிய வழித்தட பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடுகப்பட்டு, மடிப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல தொழிற் சங்கப் பொருளாளா் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தாா். செய்யாறு கிளை மேலாளா் ஆா்.சோலையப்பன் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்க இணைச் செயலா் சத்யநாராயணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி கலந்து கொண்டு மேற்படி இரு புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்து சிறிது தொலைவு ஓட்டிச் சென்றாா்.

பின்னா் கிராம மக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க