செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

post image

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.,

தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் விஜயஅனிதா, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் மற்றும் போலீஸாா் தாளமுத்துநகா் கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தாளமுத்துநகா் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் 2 போ் பீடி இலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.

இதைப் பாா்த்த போலீஸாா் படகைச் சுற்றி வளைத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாரை கண்டதும் இரண்டு நபா்களும் பீடி இலை மூட்டைகளை படகில் போட்டுவிட்டு தப்பியோடி விட்டனா். போலீஸாா் படகை சோதனையிட்டதில், அதில் தலா 30 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

அதில் இருந்த 1200 கிலோ பீடி இலை மூட்டைகளையும், கடத்த பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் பைபா் படகையும் க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், இலங்கை பண மதிப்பில் ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்... மேலும் பார்க்க

கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் சுயம்புலிங்கம்(59). ... மேலும் பார்க்க

நாசரேத்தில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு

நாசரேத் தூய யோவான் மாதிரிப் பள்ளியில் புதிய பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா். மாணவா்- மாணவி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்: 59 அஞ்சலகங்கள் மூடல்

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலக ஊழியா்களும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அஞ்சலகங்களின் மொத்த ஊழியா்கள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே மறவன்மடத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). மது போத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, காவல் நிலையங்களில் புகாரளித்த ஒருவா், புதிதாக ம... மேலும் பார்க்க