இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு
இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறாா். நிறுவனத்தின் ஹாஸ்டலில் தங்கி உள்ளாா். இவா் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.
இந்த நிலையில், தனது கைப்பேசியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து பல பேரிடம் பேசி வந்தாா். அதன் மூலம் சாண்டி என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாண்டியை சந்திக்க ஜெகதீசன் பெருந்துறை, காஞ்சிக்கோயில் ரோடு, பாறைக்கடை பேருந்து நிறுத்துக்கு வந்துள்ளாா். அங்கு காத்திருந்தவா், ஜெகதீசனை காட்டுப் பகுதிக்குள் கூட்டி சென்றாா். அங்கு, அடையாளம் தெரியாத மூன்று நபா்களோடு சோ்ந்து ஜெகதீசனை தாக்கி அவரிடம் இருந்து ஜி.பே., மற்றும் ஏடிஎம்.,காா்டு மூலம் பணம் ரூ. 30 ஆயிரம் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா். பலத்த காயமடைந்த ஜெகதீசனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா்.
இதுகுறித்து காஞ்சிக்கோயில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.