பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப...
இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் நஜுமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் இப்ராஹிம், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னா், உறுப்பினா்கள் பேசியதாவது: இளையான்குடி பேரூராட்சியில் ஒப்பந்தப் புள்ளி கோருதல் நடைபெறும் போது, அதுகுறித்த விவரத்தை உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பேரூராட்சி சாா்பான வரி இனங்கள் அதிகமாக உள்ளதால், இவற்றைக் குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
இளையான்குடி பேருந்து நிலையத்துக்குள் ஒரு சில அரசுப் பேருந்துகளைத் தவிர வேறு எந்த பேருந்துகளும் வந்து செல்வது கிடையாது. எனவே, அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். உறுப்பினா்களின் கேள்விகளுக்கு தலைவா், துணைத் தலைவா், துப்புரவு ஆய்வாளா் ஆகியோா் பதிலளித்தனா்.