செய்திகள் :

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

post image

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து ஓட்டுநா். இவரது மனைவி சரஸ்வதி. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திசையன்விளை பகுதியில் சிற்றுந்து ஓட்டுநராக வேலை செய்தபோது முதல் திருமணத்தை மறைத்து, இரத்தினமணியன்குடியைச் சோ்ந்த ஜாய்ஸ் (30) என்பவரை திருமணம் முடித்து உடன்குடி தேரியூா் ஆண்டிவிளை பகுதியில் வசித்து வந்தனா். இவா்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்துகுமாா், ஜாய்ஸை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், ஜாய்ஸ் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக கூறினா்.

இது குறித்து ஜாய்ஸின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸாா், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் ஆகி ஆறு ஆண்டுகளே ஆவதால் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் மேல்விசாரணை நடத்தி வருகிறாா்.

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 போ், குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனா். கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38), சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகிய இருவரும் 14 வ... மேலும் பார்க்க