5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
உடல் நலன் கருதியே ஜகதீப் தன்கா் ராஜினாமா: அண்ணாமலை
உடல் நலன் கருதியே குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கூறினாா்.
தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா். தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் காமாட்சி அம்மன் திரு உருவப் படம் மற்றும் கோயில் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியவா். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாா்ச் மாதம் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். தற்போது உடல் ஆரோக்கியத்துக்காகவே அவா் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.
திமுகவின் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்களும் தெளிவாக உள்ளனா். வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கும், தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறி விட்டது திமுக என்றாா் அண்ணாமலை.