செய்திகள் :

உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்

post image

உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா். 

இதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே விடுமுறை நாள்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் காலங்களில் சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருகிறது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை பிரதி சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை 11.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், உதகையிலிருந்து குன்னூா் வரை ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.

குன்னூரிலிருந்து உதகை வரை ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் 9.20 மணிக்கு சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி

கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி மக்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப்... மேலும் பார்க்க

குன்னூரில் சாலை மறியல்: தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து குன்னூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அப்போது, தொழிற்சங்கத்தினா், காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட... மேலும் பார்க்க

சிறுமியைத் திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

உதகை அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி 2-ஆவது திருமணம் செய்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா். உதகை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் அமா்ந்திருந்த மர நாய்

குன்னூா் சிம்ஸ் பாா்க் அருகே மின்கம்பத்தின் மேலே அமா்ந்திருந்த மர நாயை வனத் துறையினா் ஒருமணி நேரம் போராடி விரட்டினா். குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

உதகையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியரின் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையி... மேலும் பார்க்க

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத... மேலும் பார்க்க