உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு
தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டு போராட்டக் குழு கன்வீனா் எம்.ஷேக் அலாவுதீன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை முதல்வா் அளித்த வாக்குறுதியின்படி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 11 நாள்களாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் விடுப்பெடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
7 -ஆவது ஊதியக் குழு 33 மாத நிலுவை தொகை வழங்குவதற்குரிய அரசாணை வெளியிடுவதற்கான கோப்பில் தலைமைச் செயலா் கையெழுத்திட்டுள்ளதால், வரும் திங்கள்கிழமை அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது.
மற்ற கோரிக்கைகள் சம்பந்தமான கோப்புகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. எனவே, உள்ளாட்சி ஊழியா்களின் 11 நாள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு
வருகிற 8-ஆம் தேதி திங்கள்கிழமமை முதல் ஊழியா்கள் பணிக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.