தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாக...
ஏஐ துறையில் தடம் பதிக்கும் இந்தியா?
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாட்டில் இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், செயற்கை நுண்ணறிவு மையங்களுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியது. இந்த நிதி ஒதுக்கீட்டை வரவேற்ற பொருளாதார வல்லுநர்களும் தொழில்துறை வல்லுநர்களும், செயற்கை நுண்ணறிவுக்கான நிதி ஒதுக்கீடு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வியை அதிகரிக்கும் என்றும் கூறினர்.
இதையும் படிக்க:இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி
வணிக தொழில்நுட்ப அறிக்கை 2024-ன்படி, இந்திய வணிகங்களில் 23 சதவீதத்தினர் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவை செயல்படுத்தியுள்ளதாகவும், இந்தாண்டில் 73 சதவீதத்தினர் செயற்கை நுண்ணறிவை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறுகிறது.
கூடுதல் தகவலாக, தற்போது இணையப் பயனாளர்களில் முன்னணியில் உள்ள சாட் ஜிபிடி, டீப்சீக், அலிபாபா க்வென் 2.5 மேக்ஸ் ஆகிய மூன்று செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கு இணையாகவும், அதனைவிட மேம்பட்டதாகவும் இந்தியாவில் அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்தியா ஏஐ திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.